மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு!

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு!
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு!

டெல்லியில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில், இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) என்ற பணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.

பணி:
Junior Research Fellow (JRF) - இளநிலை ஆராய்ச்சியாளர்

மொத்தம் = 26 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 23.04.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2019
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 03.05.2019 - காலை 09.30 மணி
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: CPCB தலைமை அலுவலகம், டெல்லி

பணியமர்த்தப்படும் இடம்: டெல்லி

வயது வரம்பு: 28 வருடங்கள்
குறிப்பு: எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு கூடுதலாக 5 வருடங்கள் வயது தளர்வும் உண்டு.

ஊதியம்:
மாத ஊக்கத்தொகை - ரூ.25,000 + HRA உள்ளிட்டவை.

கல்வித்தகுதி:
முதுகலை பட்டப்படிப்பில், அறிவியல் பாடப்பிரிவுகளான கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, அனாலிடிக்கல் கெமிஸ்ட்ரி, பையாலஜி / ஜூவாலஜி / லைஃப் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல் (Chemistry, Organic Chemistry, Analytical Chemistry, Biology, Zoology / Life Science, Environmental Science) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று நெட் தேர்வில் தேர்ச்சி / தகுதி பெற்றவர்களும் அல்லது இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பில் சிவில், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் என்விரான்மெண்டல், கெமிக்கல், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி / கம்யூட்டர் சயின்ஸ் (Civil, Telecommunication Environmental, Chemical, Computer Science / IT) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று கேட் தேர்வில் தேர்ச்சி / தகுதி பெற்றவர்களும் அல்லது முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் சிவில், சுற்றுச்சூழல், கெமிக்கல், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி (Civil, Environmental, Chemical, Information Technology)இந்த பணிக்கு தகுதியானவர்கள். 

நேர்முகத் தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள்:
சுய கையெழுத்திட்ட நகல்களான, பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ்களான மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவை, முன் அனுபவம் பற்றிய சான்றிதழ்கள் 
மற்றும் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் போன்றவை.

குறிப்பு: 
நேர்முகத்தேர்வில் பங்கேற்கும் எஸ்.சி / எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு TA / DA சலுகைகள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTkzXzE1NTYwMTU3NjNfbWVkaWFwaG90bzE5ODI2LnBkZg== - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
CPCB, 
Parivesh Bhawan, 
East Arjn Nagar, 
Delhi - 110032.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
http://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTkzXzE1NTYwMTU3NjNfbWVkaWFwaG90bzI2MDUxLnBkZg== - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com