\
கொரோனா எதிரொலி : 1 முதல் 8 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ ஆல்பாஸ்

கொரோனா எதிரொலி : 1 முதல் 8 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ ஆல்பாஸ்

கொரோனா எதிரொலி : 1 முதல் 8 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ ஆல்பாஸ்
Published on

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அத்துடன் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு அதன் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும். தோல்வியுறும் மாணவர்கள் பள்ளி அடிப்படையிலான தேர்வுகள், ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்றுக் கொள்ளலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com