கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு - தனியார் கல்லூரிகளையும் மாணாக்கர் மற்றும் ஊழியர்களின் விடுதிகளையும் திறக்க அனுமதித்துள்ளது. மாணவ - மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், கல்லூரி நிர்வாகம் இதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி போட தவறிய கல்லூரி மாணவ - மாணவியர் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி - கல்லூரி மாணாக்கர் அரசுப் பேருந்துகளில் பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com