பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என குழப்பம் நிலவியது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியிலேயே நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது. கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியிலேயே தேர்வு நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.