"7.5% உள்ஒதுக்கீட்டில் பி.இ. படிப்பவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்" - ஸ்டாலின்

"7.5% உள்ஒதுக்கீட்டில் பி.இ. படிப்பவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்" - ஸ்டாலின்
"7.5% உள்ஒதுக்கீட்டில் பி.இ. படிப்பவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்" - ஸ்டாலின்

அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவித உள்ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் உரையாற்றினார். அப்போது, ’’மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இந்நேரத்தில் மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும். அரசுப்பள்ளி மாணாக்கருக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் இவ்வாண்டு சுமார் 10,000 பேர் பயனடைவர். அரசுப்பள்ளிகளில் பயின்று 7.5% உள் ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், கலந்தாய்வு கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணத்தை அரசே ஏற்கும். இது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்குப் பொருந்தும்’’ என்று அறிவித்திருக்கிறார்.

மேலும், உயர்கல்வு, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக்கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாறவேண்டும் எனவும், கால்நடை, சட்டம் மற்றும் வேளாண்மை படிப்புகளில் 300 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com