கல்வி
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் வழங்கல்
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் வழங்கல்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று முதல் (அக்டோபர் 23) வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள் தங்கள் படித்த பள்ளி மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வுமையம் மூலமும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும். மேலும், தனிநபர் இடைவெளி உள்பட பாதுகாப்பு வழிமுறைகளை அவசியம் பின்பற்றுதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.