கோடை விடுமுறை வகுப்புகளில் அல்ல, பெற்றோர்களின் மனங்களில் இருக்கிறது !

கோடை விடுமுறை வகுப்புகளில் அல்ல, பெற்றோர்களின் மனங்களில் இருக்கிறது !

கோடை விடுமுறை வகுப்புகளில் அல்ல, பெற்றோர்களின் மனங்களில் இருக்கிறது !
Published on

கோடை விடுமுறையிலும் கூட குழந்தைகள் ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மை பெற்றோர் மத்தியில் அதிகரித்து வருகிறது. போட்டி நிறைந்த உலகில் இது அவசியம் என அவர்கள் கருதுவது, குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆண்டு இறுதித் தேர்வுகள் எப்போது முடியும் எனக் காத்திருக்கும் குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களது பெற்றோர்களே செயல்படுகிறார்களோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு காலம் மாறியுள்ளது. கோடை விடுமுறையிலும் குழந்தைகளை சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பும் போக்கு மிகப் பெரிய வன்முறை என்கிறார்கள் கல்வியாளர்கள்.

கௌரவத்திற்காகவே, சில பெற்றோர் குழந்தைகள் மீது திணிக்கும் இத்தகைய வகுப்புகள் அவர்களது சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்ற விமர்சனம் எழுகிறது. ஒருவேளை அந்த வகுப்புகள் தேவை என்று கருதினால், எவற்றையெல்லாம் கருத்தில் கொள்வது அவசியம் என்று விவரிக்கின்றனர் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.

குழந்தைகளின் விருப்பத்திற்கு செவிசாய்க்காமல், அவர்கள் எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற பெற்றோரின் மனப்பான்மை மாற வேண்டும் என்பதே மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. இல்லையேல், குழந்தைகள் தடம்மாற வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். பிரிந்து விரிந்து சிதறுண்டு கிடக்கும் சொந்த பந்தங்களைக் காண அவர்களது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாமே என நமது மூதாதையர் கூறுவதை புறந்தள்ள முடியாது. 

உறவுகளைக் உறவுகளோடு கொண்டாடலாம். இதன் மூலம் அன்பும், அனுபவமும் கிடைக்கும். அனுபவிக்கவே விடுமுறை. ஆகையால் கோடை விடுமுறையிலும் கூட குழந்தைகள் ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையை பெற்றோர்கள் புறந்தள்ள வேண்டும் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com