ஆகஸ்ட் 3 முதல் கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள் : சென்னை பல்கலைக்கழகம்

ஆகஸ்ட் 3 முதல் கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள் : சென்னை பல்கலைக்கழகம்
ஆகஸ்ட் 3 முதல் கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள் : சென்னை பல்கலைக்கழகம்

இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் இணையவழி வகுப்புகளை தொடங்குமாறு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் தங்களும் இணைப்பில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 2 மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்காக இணையவழி வகுப்புகளை தொடங்குமாறு சென்ன பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று முதுநிலை 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 3 முதல் இணையவழி வகுப்பு கள் தொடங்குகின்றன. அத்துடன் இளநிலை மாணவர்கள் சேர்க்கையை செடம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், முதலாம் ஆண்டில் சேரத் தொடங்கிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19 முதல் இணையவழி வகுப்புகளை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வருகைப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ள சென்னை பல்கலைக்கழகம், ஆசிரியர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை செய்து தர வேண்டும் என கல்லூரி நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com