நீட் நுழைவுத் தேர்வு: கேள்வி - பதில் முறையில் மாற்றம்

நீட் நுழைவுத் தேர்வு: கேள்வி - பதில் முறையில் மாற்றம்
நீட் நுழைவுத் தேர்வு: கேள்வி - பதில் முறையில் மாற்றம்

இந்தாண்டு நடைபெறும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 5 மணியிலிருந்து இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தாண்டு நடைபெறும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் பாடவாரியாக ஏ பிரிவில் 35 கேள்விகளும், பி பிரிவில் 15 கேள்விகளும் இடம்பெறும். அதில் பி பிரிவில் உள்ள 15 கேள்விகளில் ஏதேனும் 10 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்கவேண்டும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் ஏ,பி என்ற பிரிவுகளில் கேள்விகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com