12ஆம் வகுப்புக்கு மறுத்தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

12ஆம் வகுப்புக்கு மறுத்தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

12ஆம் வகுப்புக்கு மறுத்தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
Published on

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கணக்குப்பதிவியல் மற்றும் பொருளாதார தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கி நடைபெற்றன. இதனிடைய சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பிற்கான கணக்குப்பதிவியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அதற்கான வினாத்தாள்கள் வாஸ்ட் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் லீக் ஆனதாக செய்தி பரவியது. இதற்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் கணக்குப் பதிவியல் மட்டும் தான் லீக் ஆனதா அல்ல, வேறெதும் வினாத்தாள்கள் லீக் ஆனதா போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு கணக்குப்பதிவியல் மற்றும் 12ஆம் வகுப்பு பொருளாதார தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இது சிபிஎஸ்இ மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com