வினாத்தாள் லீக் செய்திக்கு சிபிஎஸ்இ மறுப்பு

வினாத்தாள் லீக் செய்திக்கு சிபிஎஸ்இ மறுப்பு

வினாத்தாள் லீக் செய்திக்கு சிபிஎஸ்இ மறுப்பு
Published on

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் இன்று லீக் ஆனதாக செய்தி பரவிய நிலையில் அதனை சிபிஎஸ்இ மறுத்துள்ளது.

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடைய சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பிற்கான கணக்குப்பதிவியில் தேர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அதற்கான வினாத்தாள்கள் வாஸ்ட் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் லீக் ஆனதாக செய்தி பரவியது. இந்நிலையில் இதற்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ தரப்பில், “ சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள் லீக் ஆகவில்லை. எல்லா வினாத்தாள்களும் சீல் பிரிக்கப்படாமலேயே தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தேர்வின் நம்பகத் தன்மையை கெடுக்கும் பொருட்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யாரே வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வினாத் தாள் லீக் ஆகிவிட்டதாக செய்தி பரவவிட்டிருக்கின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com