சிபிஎஸ்இ எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகளை www.Cbse.nic.in, www.Cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 16 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த 16 லட்சத்து 67 ஆயிரம் மாணவ, மாணவியர் இந்தாண்டு 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் சுமார் பாதி பேர், பள்ளித் தேர்வாகவும், மற்றவர்கள் கல்வி வாரியத்தின் மூலமாகவும் தேர்வு எழுதியுள்ளனர்.