கல்வி
அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை ஏற்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை ஏற்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறும்போது, “அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க இயலாது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்யாமல் எந்த மாதிரி தேர்வு நடைமுறையை மேற்கொள்ளலாம் என ஆலோசியுங்கள்.
அரியர் தேர்ச்சி விவகாரத்தில் யூஜிசி, தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும். இது தொடர்பான ஆலோசனை அறிக்கையை வரும் 15 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக, மாணவர்களின் அரியர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.