கல்வி
"மகாராஷ்டிராவில் நீட் தேர்வை ரத்து செய்க" - உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் கடிதம்
"மகாராஷ்டிராவில் நீட் தேர்வை ரத்து செய்க" - உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் கடிதம்
வியாபம் ஊழல் போன்று நீட் தேர்வு மாறியுள்ளதால், அதை மகாராஷ்டிராவில் ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா பட்டோலி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது, வினாத்தாள் வெளியாகி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றார். சிபிஎஸ்இ போன்ற மத்திய பாடத்திட்ட மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவர்களைவிட அதிக அளவில் நீட் மதிப்பெண்களை பெறுவதாகவும் நானா பட்டோலி குற்றம்சாட்டினார்.