இன்று முதல் சென்னை புத்தகத் திருவிழா.. 108 நூல்களை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை 46 வது சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 6 ஆம் தேதி மாலை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதில் 463 பதிப்பாளர்கள் தங்களின் பல்வேறு வகையான நூல்களை வெளியிட உள்ளனர்.
நூற்றாண்டு காணும் படைப்பாளிகளின் நூல் வெளியீடு எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சர் பேராசியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் எழுதிய கட்டுரைகள் ,தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெறும் சென்னை இலக்கியத்திருவிழா துவக்க விழா நிகழ்சியில் வெளியிடுகிறார்.
முதலமைச்சர் இன்று வெளியிடும் 100 புத்தகங்களில்
திசைதோறும் திராவிடம் பிரிவில் 12 புத்தகங்களும்
முத்தமிழறிஞர் மொழிபெயர்புத்திடம் பிரிவில் 22 புத்தகங்களும்
இளந்தளிர் இலக்கிய திட்டம் பிரிவில் ....36 புத்தகங்களும்
சங்க இலக்கியங்கள்...பத்துப்பாட்டு ...10 புத்தகங்களும்
கலைக்களஞ்சியம் 10..புத்தங்கள்
நூற்றாண்டு காணும் ஆளுமைகளின் படைப்புகள்..1..
வ.உ.சி நூல் திரட்டு..2
நாளை தலைமுறைக்கு நாட்டுமை நூல்கள்...7
உள்ளிட்ட 108 நூல்கள் வெளியிடப்பட உள்ளது.
இத்துடன் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜெய்பீம் நூலாகவும் வெளிவந்துள்ளது.