பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை - 2,684 காலியிடங்கள்!

பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை - 2,684 காலியிடங்கள்!

பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை - 2,684 காலியிடங்கள்!
Published on

மத்திய அரசின் கீழ் செயல்படும், ஒளிபரப்பு பொறியியல் சார்ந்த நிறுவனமான பி.இ.சி.ஐ.எல் (BECIL)-நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடைப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பணிகள்:

திறன் சார்ந்த பணியாளர்கள் - 1,336
திறன் சாராத பணியாளர்கள் - 1,342
கன்சல்டன்ட் பணிகள் - 04
அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடிவ் - 02
மொத்தம் = 2,684 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 10.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.07.2019

ஊதியம்:

1. திறன் சார்ந்த பணியாளர்கள் - குறைந்தபட்சம் ரூ.9,381 மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

2. திறன் சாராத பணியாளர்கள் - குறைந்தபட்சம் ரூ.7,613 மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

3. கன்சல்டன்ட் - குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் அதிகபட்சம் ரூ.50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

4. அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடிவ் - குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:

பணிகளை பொறுத்து ஊதியத்தில் மாற்றங்கள் உண்டு.

வயது வரம்பு:

திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத பணியாளர்கள் - குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
குறிப்பு:

பணிகளை பொறுத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

பதிவுக்கட்டணம்:

1. பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500

2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.250

பதிவுக்கட்டணம் செலுத்தும் முறை:

பதிவுக்கட்டணத்தை Broadcast Engineering Consultants India Limited, payable at New Delhi என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். குறிப்பாக கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் பதிவுக்கட்டணத்தை செலுத்தலாம். 

Account Holder’s Name : BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED
Name of the Bank : CORPORATION BANK
Account No. : 510341000702746
IFSC : CORP0000371
Branch Address : CORPORATION BANK, CGO COMPLEX, LODHI ROAD, NEW DELHI-110003

கல்வித்தகுதி:

1. திறன் சார்ந்த பணியாளர் பணிகளுக்கு, குறைந்தபட்சமாக எலக்ட்ரிக்கல் டிரேட் மற்றும் வையர்மேன் போன்ற ஐடிஐ சான்றிதழ் அல்லது டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படிப்பை பயின்று குறைந்தபட்சமாக 2வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

2. திறன் சாராத பணியாளர் பணிகளுக்கு - குறைந்தபட்சமாக எட்டாம் வகுப்பை பயின்று குறைந்தபட்சமாக 1வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

3. கன்சல்டன்ட் பணிகளுக்கு - குறைந்தபட்சமாக பி.டெக் (எலக்ட்ரிக்கல்ஸ்) பட்டப்படிப்பை பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடிவ் பணிகளுக்கு - குறைந்தபட்சமாக பி.காம் அல்லது அதிகபட்சமாக எம்.காம் / எம்.பி.ஏ பட்டப்படிப்பை பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://www.becil.com/vacancies அல்லது www.beciljobs.com - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை  பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், இது குறித்த தகவல்களைப் பெற https://www.becil.com/uploads/vacancy/PVVNL10july19pdf-5e206875495213e87fe49cd6f968b5d0.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com