பி.இ கலந்தாய்வு: இன்று கடைசி வாய்ப்பு

பி.இ கலந்தாய்வு: இன்று கடைசி வாய்ப்பு

பி.இ கலந்தாய்வு: இன்று கடைசி வாய்ப்பு
Published on

பி.இ பொதுப்பிரிவு மற்றும் துணை கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவர்கள் இன்று கலந்து கொள்ள கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்‌‌பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான்கு சுற்றுகளாக நடந்து முடிந்த ஆன்லைன் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வுகளுக்குப் பணம் செலுத்தி விட்டு கலந்தாய்வில் பங்கேற்காதவர்களுக்கும், கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் இடம் ஒதுக்கப்படாதவர்களுக்கும் இ‌றுதி வாய்ப்பு அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் ‌கல்லூரி வ‌ளாகத்தில் இன்று ந‌டைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-22351014 மற்றும் 044-22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும்‌ கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com