பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!

பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anna University
Anna UniversityPT Desk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கு மே 5 ஆம் தேதி (இன்று) தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி வரை மாணவர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

Anna university
Anna universitypt desk

இதற்காக மாணவர்கள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in ஆகிய இரண்டு இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம்.

இணைய வழியாக விண்ணப்பிப்பதில் சிக்கல் இருக்கும் மாணவர்களுக்கு உதவுவதற்காக மாவட்ட அளவில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓ‌.சி., பி.சி. உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணம். எஸ்.சி‌., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணமாகும்.

இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேண்டம் எண் ஜூன் 7ஆம் தேதி வெளியீடும். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறும். பின்னர் தரவரிசை பட்டியல் ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்படும்.

Schedule
ScheduleTwitter

முதலில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன் பிறகு பொது பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24- ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com