தமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்.!

தமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்.!
தமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்.!

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கும் நோக்கில் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ''கற்போம் எழுதுவோம் இயக்கம்'' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த திட்டத்தை மாநில பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் செயல்படுத்தவுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட 1.24 கோடி பேர் முழுமையாக எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கினால் மட்டுமே கல்வியில் ஒட்டுமொத்த வளர்ச்சி என்ற இலக்கை அடையமுடியும்.

தமிழகத்தில் முதல்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 3 லட்சம் பேருக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் எழுத்தறிவு கல்வி வழங்க பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் முற்றிலும் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும், முதல் கட்டமாக கிராமம், வார்டுவாரியாக ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படும் குடும்ப விவரம் மற்றும் சர்வே அடிப்படையில் கல்வி நிலை என்ற பகுதியில் 15 வயதுக்கு மேற்பட்டோர் விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் கற்போர் கல்வியறிவு மையங்களாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com