அரியர் தேர்ச்சி... துணைவேந்தர்-அமைச்சரின் இருவேறுபட்ட கருத்து..: மாணவர்கள் குழப்பம்.!

அரியர் தேர்ச்சி... துணைவேந்தர்-அமைச்சரின் இருவேறுபட்ட கருத்து..: மாணவர்கள் குழப்பம்.!
அரியர் தேர்ச்சி... துணைவேந்தர்-அமைச்சரின் இருவேறுபட்ட கருத்து..:  மாணவர்கள் குழப்பம்.!

பொறியியல் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய அரியர் தேர்ச்சி விவகாரத்தில் துணைவேந்தர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இருவரும் வேறுவேறு கருத்துகளை கூறிவரும் நிலையில் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பொறியியல் அரியர் தேர்வில் தமிழக அரசின் தேர்ச்சி அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரியர் தேர்ச்சி செல்லாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கழகத்திடம் இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்திருப்பதாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் “அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக திணிப்பது கண்டனத்திற்குரியது என்றும், ஏஐசிடிஇ மின்னஞ்சல் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஏஐசிடிஐ தனக்கு மின்ன்ஞ்சல் அனுப்பியுள்ளதாகவும், அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதிதான் தேர்ச்சி கொடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் சூரப்பா கூறியிருந்தார்.

இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் “அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை, இதுகுறித்து ஏஐசிடிஇ எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக திணிப்பது கண்டனத்திற்குரியது, ஏஐசிடிஇ மின்னஞ்சல் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும். பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரியர் தேர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை” என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பொறியியல் படித்து முடித்த மாணவர் சிவக்குமார் “ இந்த ஆண்டு பொறியியல் தேர்வுகளை எழுதுவதற்காக பல்வேறு மாணவர்கள் தேர்வுக்கட்டணம் கட்டி காத்திருந்தனர், ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக தேர்வெழுத முடியவில்லை. ஏற்கனவே பொறியியல் படிப்பு முடிந்து அரியர் எழுத முடியாத சூழலில் இருந்த மாணவர்கள், இதானால் வேலைக்கு செல்ல முடியாத சூழலும் இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழக அரசு அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சியை வழங்கியது, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களும், பெற்றோரும் வரவேற்றனர். ஆனால் இப்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அமைச்சர்கள் வேறுவேறு கருத்துகளை கூறுவது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. உயர்நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ளது, அதனால் உடனடியாக தமிழக அரசு இந்த விஷயத்தில் தெளிவான, உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்ட

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com