\
தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
Published on

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை தருகின்றனர். தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தபட உள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியை நோக்கி முதலாமாண்டு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு, தாங்கள் தேர்ந்தெடுத்த இளநிலை அறிவியல் மற்றும் கலை படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்காக, கல்லூரியை நோக்கி வந்த வருகை தருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com