மதுரை : அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம்

மதுரை : அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம்
மதுரை : அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா எதிரொலியாக கல்லூரி இறுதியாண்டு மற்றும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால் அரியர் மாணவர்கள் மிகுந்த மகிச்சியில் இருந்தனர். மேலும், அரியரை பாஸ் செய்ய வைத்த முதல்வருக்கு நன்றி என இளைஞர்கள் போஸ்டர் மற்றும் பேனர்களை வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அரியர் தேர்ச்சி என்கிற தமிழக் அரசின் முடிவு தவறானது என கூறியிருந்தது. இதனிடையே அண்ணா பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது தங்கள் முடிவை தெரிவிப்போம் என ஏஐசிடிஇ தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் ஏஐசிடிஇ - க்கு இடையேயான முரண்பட்ட கருத்து அரியர் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

போராட்டத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம் எனவும், அரசு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து பேட்டியளித்த மாணவர் ஒருவர், “ஏஐசிடிஇ கருத்தால் அரியர் மாணவர்கள் தற்போது குழப்பத்தில் உள்ளோம். தமிழக அரசு தேர்வு முடிகளை உடனடியாக வெளியிட வேண்டும். அரியர் மாணவர் தேர்ச்சி என்ற தமிழக அரசு அறிவிப்பு தற்போது மாணவர்கள் காதில் பூ வைப்பதை போல உள்ளது” எனக் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com