சேலம்: ஸ்ரீ சண்முகா கல்வி குழுமத்தில் ‘அறிவோம் டிஜிட்டல்’ நிகழ்ச்சி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

'அறிவோம் டிஜிட்டல்’ என்ற மாணவர்களுக்கான நிகழ்ச்சி இன்று (மே 5-ஆம் தேதி) சேலம் சங்ககிரியில்ல் உள்ள ஸ்ரீ சண்முகா கல்வி குழுமத்தில் நடைபெற்றது.
Arivom Digital Event
Arivom Digital EventPT Web

புதிய தலைமுறை மற்றும் சேலம் ஸ்ரீ சண்முகா கல்வி குழுமம் இணைந்து , ‘அறிவோம் டிஜிட்டல்’ என்ற மாணவர்களுக்கான நிகழ்ச்சியை இன்று (மே 5-ஆம் தேதி) சேலம் சங்ககிரியில்ல் உள்ள ஸ்ரீ சண்முகா கல்வி குழுமத்தில் நடத்தியது.

இதில் புதிய தலைமுறை டிஜிட்டில் பிரிவின் ஆசிரியர் பரிசல் கிருஷ்ணா மற்றும் புதிய தலைமுறையின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன், The Federal-ன் Senior Manager செல்வகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தனர்.

மாறிவரும் இன்றைய சூழலில் எல்லோமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இப்படிப்பட்ட டிஜிட்டல் உலகை மாணவர்கள் எந்தளவிற்கு உபயோகமானதாக பயன்படுத்த வேண்டும் என்பதை விருந்தினர்கள் சிறப்பாக எடுத்துரைத்தனர்.

Arivom Digital Event
Arivom Digital EventPT Web

டிஜிட்டல் உலகில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள், பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் மூலம் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பது, சமூக வலைதளங்களில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என பல விஷயங்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.

மாணவர்களும் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர். பல துறைகளில் பயின்று வரும் மாணவர்கள், டிஜிட்டல் அறிவோம் நிகழ்ச்சி மூலம் டிஜிட்டல் குறித்து தங்களுக்கு மேலும் தெளிவு கிடைக்கப்பெற்றதாக கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com