கல்வி
ரயில்வேயில் போலீஸ் வேலை: இப்போது விண்ணப்பிக்கலாம்..!
ரயில்வேயில் போலீஸ் வேலை: இப்போது விண்ணப்பிக்கலாம்..!
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ரயில்வே பாதுகாப்பு படையில் 4216 கான்ஸ்டபிள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. இதற்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
கான்ஸ்டபிள் பதவிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும்.18லிருந்து 25க்குள் வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 30 வயதும், ஒ.பி.சி பிரிவினருக்கு 28 வயது வரை தளர்வு உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.6.2018
மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி : www.indianrailways.gov.in

