வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!
ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை
ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர் பணியில் சேர விரும்புவோர் ஏரோஸ்பேஸ், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். பி.காம் படித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.5.2018
விவரங்களுக்கு: http://www.airindia.in/careers.htm
பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டண்ட் நிறுவனத்தில் வேலை
பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டண்ட் நிறுவனத்தில் புரோகிராம் கோ-ஆர்டினேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 300 காலியிடங்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.5.2018
விவரங்களுக்கு: http://www.becil.com