தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு... விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு... விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு... விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

2020-21 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள, புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஈராண்டுகால முழுநேர தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 5 ஆயிரம் ரூபாய் பயிலுதவி தொகையாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnarch.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம், விண்ணப்பங்கள் 25.08.20 மாலை 5 மணிக்குள் வந்துசேரவேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008, தொலைபேசி எண்-044-28190020, மின்னஞ்சல் – tnarchioa@gmail.com

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com