\
9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு - தமிழக அரசு முடிவு

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு - தமிழக அரசு முடிவு

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு - தமிழக அரசு முடிவு
Published on

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்து விட்டார். இதனால் மாணவர்கள் வீட்டில்தான் உள்ளனர். ஆனாலும் 9,10 வகுப்பு மாணவர்கள் அவர்கள் பாடம் குறித்து அறிந்து வைத்துள்ளனரா என்பதை அறிய திறனறி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்பட்டு ஆன்லைனில் திறனறிவு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது கேள்விதாளை வாட்ஸ்மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு அதற்கான விடையை எழுதி புகைப்படம் எடுத்து திரும்ப அனுப்ப வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com