கல்வி
37 தமிழக அரசு கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சார்பில் புதிய முதல்வர்கள் நியமனம்
37 தமிழக அரசு கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சார்பில் புதிய முதல்வர்கள் நியமனம்
தமிழ்நாடு முழுவதும் 37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி முதல்வர்களாக நியமித்துள்ளது உயர்கல்வித்துறை. அரசு கலை & அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சிக் கல்லூரிகள் என்று 37 பல்வேறு தரப்பட்ட கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேர உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்தி: கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை