பொறியியல் படிப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்க் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாளை முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேண்டம் என் ஆகஸ்ட் 25-ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4-ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சிறப்பு இடஒதுக்கீடு பிரிவில் இடம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரையிலும் துணை கலந்தாய்வு அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையிலும், ஆதிதிராவிடப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com