கல்வி
பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்விற்கு மே 3 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 42 மையங்களில் கலந்தாய்விற்காக மாணவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் ஜுன் முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ் சரி பார்க்கப்படும் என கூறிய அவர், மருத்துவ கலந்தாய்வுக்கு ஏற்ப பொறியியல் கலந்தாய்வில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அந்த தேதிகள் பிறகு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.