20 ஆண்டுகளாக அரியர் வைத்த மாணவர்களுக்கு 33 தேர்வு மையங்கள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

20 ஆண்டுகளாக அரியர் வைத்த மாணவர்களுக்கு 33 தேர்வு மையங்கள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
20 ஆண்டுகளாக அரியர் வைத்த மாணவர்களுக்கு 33 தேர்வு மையங்கள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுத 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளது.

இதுறித்த அறிவிப்பில், “வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டரின் போது தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் வசதிக்கு மாநிலம் முழுவதும் 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு, அதை க்ளியர் செய்ய வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடக்கவுள்ளது.

 இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான தேர்வு மையத்தை வரும் 18-ம் தேதிக்குள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த மையத்தையும் தேர்வு செய்யவில்லை என்றால், ஏதேனும் ஒரு மையம் ஒதுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com