கல்வி
அண்ணாமலை, ஜெயலலிதா பல்கலைக்கழகங்களை இணைக்கும் மசோதா - சட்டமன்றத்தில் இன்று தாக்கல்
அண்ணாமலை, ஜெயலலிதா பல்கலைக்கழகங்களை இணைக்கும் மசோதா - சட்டமன்றத்தில் இன்று தாக்கல்
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்வார் என்றும் சட்டமன்றத்தில் இன்றே நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு உடனடியாக துணை வேந்தர் நியமனமும் நடைபெற்றது. தற்போது புதிய பல்கலைக்கழகத்திற்கான தேவை இல்லையெனக் கூறி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என ஏற்கனவே அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.