அண்ணா பல்கலைக்கழக மறுத்தேர்வு ஏன்? - அமைச்சர் பொன்முடி விளக்கம்
மேற்படிப்பு, வேலைவாய்ப்பு முதலிய மாணவர்களின் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழக தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. ஊரடங்கு காரணமாக தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், "2017 ஒழுங்குமுறைப்படி முதுகலை, இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14 முதல் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும். 2013 ஒழுங்குமுறைப்படி எழுதிய யு.ஜி மாணவர்களுக்கு ஜூன் 14இல் தேர்வு தொடங்கும்.
மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமல் உள்ள மாணவர்கள் ஜூன் 3க்குள் கட்டணம் செலுத்தலாம். மற்ற பல்கலைகழகங்களில் ஜூன் 15ல் தொடங்கி ஜூலை 15க்குள் தேர்வுகளை முடிக்க வேண்டும். ஜூலை 30ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்துள்ளோம்." என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.