பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Published on

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மாணவர்கள் 12ம் வகுப்புத் தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை www.annauniv.edu மற்றும் www.tnea.ac.in ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம். இந்த தரவரிசைப் பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று 59 பேர் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மருத்துவக் கலந்தாய்வு தேதிக்கேற்ப பொறியியல் கலந்தாய்வு தேதியை மாற்றியமைக்க  திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. நடப்பாண்டில் 1.40 லட்சம் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com