கல்வி
பொறியியல் மாணவர்களுக்கு டிச. 13 முதல் செமஸ்டர் தேர்வு
பொறியியல் மாணவர்களுக்கு டிச. 13 முதல் செமஸ்டர் தேர்வு
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வு, இண்டர்னல் தேர்வு, வைவா உள்ளிட்ட அனைத்தும் நேரடியாகவே நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்காக அரியர் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளின் போது அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான தேர்வு மையத்தை வரும் 18-ம் தேதிக்குள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் ஏதேனும் ஒரு மையம் ஒதுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.