\
அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on

தொடர் விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து
ஜனவரி 2-ம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல் காரணமாக இந்த விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் ஜன.1ஆம் தேதிவரை
நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை,
நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com