\
பொறியியல் மாணவர்களுக்கு 20ஆம் தேதிவரை விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கு 20ஆம் தேதிவரை விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கு 20ஆம் தேதிவரை விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Published on

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வரும் 20ஆம் தேதி வரை விடுப்பு அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறன்று முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நர்சரிப் பள்ளிகள் மற்றும் அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வரும் 20ஆம் தேதி வரை விடுப்பு அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com