பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காஞ்சிபுரத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 

காஞ்சிபுரத்தில் பெருநகர் மாதிரி பள்ளியில் ஆய்வகத்தை திறந்துவைத்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளரிடம் பேசியபோது, ’’செப்டம்பர், நவம்பர் மாதத்தில் இருந்துதான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுகுறித்து அச்சம் அடையக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. ஜனவரி மாதத்தில் மாதிரித் தேர்வுகள் நடைபெற்று, வழக்கம்போல் பொதுத்தேர்வானது மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் நடைபெறும்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு உள்ளது. அதே விழிப்புணர்வு தனியார் பள்ளி ஆசிரியர்களிடமும் அதிகரிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளியில் பாலியல் தொடர்பான பிரச்னை இருந்தால் அதை மறைக்காமல் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான், மூடி மறைக்காமல் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றார்கள் என்று அந்த பள்ளியின் மீது பெற்றோர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 35 சதவீதத்தில் இருந்து 55 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் எது எது மாணவர்களுக்கு முக்கியமானதோ, தேவையோ அதில் எதுவுமே குறைக்கவில்லை; மாணவர்களுக்கு அதி முக்கியமாக எது தெரிய வேண்டுமோ அது கண்டிப்பாக இருக்கும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com