\
ஆம்பூர்: ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன் பள்ளியிலிருந்து இடைநீக்கம்

ஆம்பூர்: ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன் பள்ளியிலிருந்து இடைநீக்கம்

ஆம்பூர்: ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன் பள்ளியிலிருந்து இடைநீக்கம்
Published on

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ஆசிரியரை தாக்க முயன்ற மாணவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் , அந்த மாணவன் தற்காலிகமாக பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு  தாவரவியல் ஆசிரியராக பணிபுரிபவர் சஞ்ஜெய், இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் இருந்து பணிமாறுதல் பெற்று தற்போது இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.



இந்த சூழலில் , அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாரி என்ற மாணவரிடம் பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் தாவரவியல் ஆசிரியர் செய்முறை தேர்விற்காக கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை சமர்பிக்கும் படி கூறியுள்ளார், அப்பொழுது  மாரி என்ற மாணவன் ஆசிரியர் முன்னரே வகுப்பறையில் பாய் போட்டு படுத்துள்ளான், இதனை ஆசிரியர் தட்டிகேட்ட போது ஆசிரியரையே   தாக்க முயன்றுள்ளான். இதனை சக மாணவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் காயத்ரி சுப்பிரமணியம் மற்றும் ஆம்பூர் வட்டாச்சியர் பழனி பள்ளி தலைமையாசிரியர் வேலன் தலைமையில் நடைப்பெற்ற  விசாரணையில் மாணவன் அதிக அளவு ஆபாசமாக பேசியதாகவும், ஆசிரியருக்கு இடையூறு ஏற்படுத்தியதால் மாணவனை பள்ளியில் இருந்து  தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com