அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் முடிவுகள் வெளியீடு
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
www.mcc.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் நிகர்நிலை பல்கலைகழகங்களின் முதற்கட்ட கவுன்சிலிங் முடிவுகளையும் இதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த கலந்தாய்வில் சீட்டு ஒதுக்கீடு பெற்றோர், 22க்குள் தேர்ந்தெடுத்த கல்லுாரிகளில் சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கான பதிவு துவங்குகிறது, இந்த கலந்தாய்வில் இடம்பெற்றோர் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள், ஆகஸ்ட் 16ம் தேதி மாலை 5:00 மணிக்கு
பின், மாநில ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.