\
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை... நீங்களும் விண்ணப்பிக்கலாமே..!

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை... நீங்களும் விண்ணப்பிக்கலாமே..!

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை... நீங்களும் விண்ணப்பிக்கலாமே..!
Published on

ஏர் இந்தியா நிறுவனத்தில், அசிஸ்டண்ட் சூப்பர்வைசர்  பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள் & காலிப்பணியிடங்கள்:
அசிஸ்டண்ட் சூப்பர்வைசர்

மொத்தம் = 170 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2019 

தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 24.11.2019

வயது வரம்பு:
01.08.2019 அன்றுக்குள், அதிகபட்ச வயது வரம்பு 33 வயது ஆக இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
மேற்கண்ட பணிகளுக்கு வயது தளர்வும் உண்டு.

தேர்வுக்கட்டணம்:
1. பொது / ஓபிசி / EWS பிரிவினர் - ரூ.1,000
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.500
3. மாற்றுத்திறனாளிகள் (Min. 40% Disability) தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.19,570 மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
அசிஸ்டண்ட் சூப்பர்வைசர் என்ற பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் / கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். 

(அல்லது)

3 வருட டிப்ளமோ இன் இன்ஜினியரிங் / விமான பராமரிப்பு (Air Craft Maintenance) இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு படிப்பை முடித்து அத்துடன், குறைந்தபட்சம் ஒரு வருடம் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் http://aiesl.assistantsupervisor.parakh.online/ (அல்லது) http://www.airindia.in/careers.htm (அல்லது) http://aiesl.assistantsupervisor.parakh.online/home - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த தகவல்களைப்பெற,
http://www.airindia.in/writereaddata/Portal/career/840_1_Notification-18102019-CORRIGENDUM.pdf - என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com