\
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும் - ஏஐசிடிஇ எச்சரிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும் - ஏஐசிடிஇ எச்சரிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும் - ஏஐசிடிஇ எச்சரிக்கை
Published on

அரியர்ஸ் தேர்வு ரத்தை ஏற்க முடியாது என ஏஐசிடிஇ கடிதம் எழுதியதாக கூறியிருந்தார் அண்ணா பலகலைக்கழக துணைவேந்தர் சூரப்பா. ஆனால் ஏஐசிடிஇ-யின் கடிதம் தமிழக அரசுக்கு வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியிருந்தார். இதனால் கடும் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் தமிழக அரசின், அரியர் தேர்வுகள் ரத்து அறிவிப்புக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், அரியர்ஸ் வைத்துள்ள இறுதியாண்டு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற வைப்பதை ஏற்கமுடியாது. தேர்வின்றி மாணவர்களை தேர்ச்சி பெறவைத்தால், அது அவர்களுக்கு உயர்க்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும் என ஏஐசிடிஇ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின், அரியர்ஸ் தேர்வுகள் ரத்து அறிவிப்புக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com