+2க்கு பின் என்ன படிக்கலாம்? உடனே முப்படைகளில் வேலை ரெடி!

+2க்கு பின் என்ன படிக்கலாம்? உடனே முப்படைகளில் வேலை ரெடி!

+2க்கு பின் என்ன படிக்கலாம்? உடனே முப்படைகளில் வேலை ரெடி!
Published on

இந்திய தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமி இணைந்து நடத்தும் பயிற்சி நுழைவுத் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்திய தேசிய பாதுகாப்பு அகாடமி - 342 காலிப்பணியிடங்கள் (இதில் ராணுவப்படை - 208, கடற்படை - 42, விமானப்படை - 92)
இந்திய கடற்படை அகாடமி - 50 காலிப்பணியிடங்கள். ஆக, மொத்த காலிப்பணியிடங்கள் - 392

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 09.01.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2019, மாலை 6.00 மணி வரை
தேர்வு நடைபெறும் தேதி: 21-04-2019.

இரண்டு கட்டமாக இந்தத் தேர்வு நடைபெறும்.

1. உளவியல் தகுதி தேர்வு மற்றும் 
2. நுண்ணறிவுத் தேர்வு

08.02.2019 முதல் 14.02.2019 மாலை 6.00 மணி  வரை விண்ணப்பத்தை திரும்ப பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதில் பயிற்சிப் பெற அதற்கான குறிப்பிட்ட உடற்தகுதியும், மனவலிமையும் பெற்றிருத்தல் அவசியம்.

முக்கிய தகுதிகள்:

1. இந்தியராக இருத்தல் வேண்டும். 
2. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயிற்சி முடியும் வரை திருமணம் செய்யாமல் இருத்தல்   வேண்டும்.
3. 02.07.2000 முதல் 01.07.2003 க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:
(எஸ்.சி, எஸ்.டி, JCO's பிள்ளைகள், NCO's பிள்ளைகள் மற்றும் OR's பிள்ளைகள் தவிர) பிற தேர்வர்கள் - 100 ரூபாய்.

எஸ்பிஐ வங்கியின் பணபரிவர்த்தனை முறையில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:
+2 படித்தவர்களும், +2 முடித்தவர்களும் இந்தத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள்.
+1 படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தத் தேர்வுக்கு தகுதி பெற மாட்டார்கள்.

உடற்தகுதி:
குறைந்தபட்சமாக 157 செ.மீட்டர் உயரமாவது இருத்தல் வேண்டும். 
விமானப்படைக்கு 162.5 செ.மீட்டர் உயரமாவது இருத்தல் வேண்டும். 
மற்றும் பல்வேறு உடற்தகுதிகள் தேவை. 

பல்வேறு கல்வி உதவித் தொகைகளும் உண்டு.

பயிற்சிகள்:

நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு, இந்திய தேசிய பாதுகாப்பு அகாடமியில், குறிப்பாக ராணுவப்படையில் பயிற்சி பெறும் மாணவர்கள் முதற்கட்ட பயிற்சியின் போது கல்வி மற்றும் உடல் சார்ந்த 3 வருட பயிற்சி  வழங்கப்படும். பயிற்சி முடிவின்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் இருந்து கீழ் காணும் பட்டங்களை பெறுவர்.

* ராணுவப்படையில் பயிற்சி பெறும் மாணவர்கள் B.Sc/ B.Sc (Computer)/ B.A

* இந்திய கடற்படை அகாடமியில், முதற்கட்ட பயிற்சியின் போது கல்வி மற்றும் உடல் சார்ந்த 4 வருட பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிவின்போது, பி.டெக் பட்டம் பெறுவர்.

* விமானப்படையில், முதற்கட்ட பயிற்சியின் போது கல்வி மற்றும் உடல் சார்ந்த 4 வருட பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிவின்போது, பி.டெக் பட்டம் பெறுவர்.

பயிற்சியின் முடிவில் தேர்வு பெற்றவர்கள், 
* ராணுவப்படை மாணவர்கள் எனில் - இந்திய ராணுவ அகாடமி, டேராடூன்
* கடற்படை மாணவர்கள் எனில் - இந்திய கடற்படை அகாடமி, எழிமலா
* விமானப்படை மாணவர்கள் எனில் - ஏர் போர்ஸ் அகாடமி, ஹைதராபாத்தில் பணியில் அமர்த்தப்படுவர்.
பயிற்சியின் போது பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, உடலுறுப்பு செயலிழந்தாலோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்கான காப்பீடு வழங்கப்படும்.

மேலும் தெளிவான மற்றும் கூடுதல் விவரங்களை அறிய

http://www.upsc.gov.in/sites/default/files/Notice-NDA-I-2019-Engl.pdf - என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com