பொறியியல் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 17-ல் தரவரிசைப் பட்டியல்; கட்டணத்தில் உயர்வில்லை..!

பொறியியல் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 17-ல் தரவரிசைப் பட்டியல்; கட்டணத்தில் உயர்வில்லை..!
பொறியியல் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 17-ல் தரவரிசைப் பட்டியல்; கட்டணத்தில் உயர்வில்லை..!

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17- ம் தேதியன்று வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். ரேண்டம் எண்கள் எனப்படும் சமவாய்ப்பு எண்களை புதன் கிழமையன்று அவர் வெளியிட்டார்.

பொறியியல் படிப்புகளில் சேர ஜூலை 15ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. ஆகஸ்ட் 16ம் தேதி முடிவடைந்தது. கடந்த ஆண்டைவிட அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் மாணவ மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு ரேண்டம் எண் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், "பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17 ம் தேதி வெளியிடப்படும். அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்விக்கட்டணம் உயர்வில்லை" என்று அறிவித்தார். கடந்த ஆண்டில் தமிழகத்தில் 480 ஆக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 458 கல்லூரிகளாகக் குறைந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com