தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை: முழு விவரம்!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை: முழு விவரம்!!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை: முழு விவரம்!!

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு பிளஸ் டூ படித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2020 -2021 கல்வியாண்டில் வழங்கப்படும் இந்தப் பட்டப்படிப்புகள் 14 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்கப்படுகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீட்டின்படி, அனைத்து கல்வி நிறுவனங்களில் 68 வது இடத்தையும், பல்கலைக்கழகத் தரவரிசையில் 44 வது இடத்தையும் மாநில அளவில் இரண்டாவது இடத்தையும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

பட்டப்படிப்புகள்


வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்தியல் மற்றும் உணவு முறையியல், பட்டுவளர்ப்பு ஆகிய பாடப்பிரிவுகளில் இளம் அறிவியல் படிப்புகளும் வேளாண்மைப் பொறியியல், உயிர்த் தகவலியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் இளம் தொழில்நுட்பப் படிப்புகளும், வேளாண் வணிக மேலாண்மை பாடப்பிரிவுகளில் பிஎஸ்சி ஹானர்ஸ் படிப்பும் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி


இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கவேண்டும். 10,11,12 ஆம் வகுப்புகளில் வேறு மாநிலங்களில் படித்தவர்கள் நிரந்தர இருப்பிடச் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்.

1.7.2020 ஆம் தேதியன்று 21 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு வயதுவரம்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 600. பட்டியலினத்தவர்களுக்கு ரூ. 300. இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தலாம். இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படாது. இணையதளம் வழியாக மட்டுமே கலந்தாய்வு நடைபெறும்.

சில முக்கிய தேதிகள்
விண்ணப்பம் பதிவேற்றம் செய்யத் தொடங்கும் நாள்: 7.8.2020
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 17.9.2020

விவரங்களுக்கு: https://tnauc.ac.in/ugadmission/

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com