மகளிர் அரசினர் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை... செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை அம்பத்தூரில் உள்ள மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர விரும்பும் மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அம்பத்தூரில் உள்ள மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கம்மியர் கருவிகள், கணினி இயக்கம்(உதவியாளர்), ஸ்டெனோகிராபி, கட்டட வரைவாளர், தையல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கல்வித்தகுதி
தையல் தொழில்நுட்பத்தில் சேர விரும்புவோர் 9ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மற்ற ஐடிஐ பிரிவுகளில் சேர விரும்பும் மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயதுவரம்பு கிடையாது.
சலுகைகள்
பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 500 உதவித்தொகையாக வழங்கப்படும். பேருந்து கட்டணச் சலுகை, இலவச மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணி மற்றும் தொழில் நிறுவனங்களின் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அலுவலக வேலை நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இணையதளம் வழியாக விண்ணப்பிக்க முடியாதவர்கள் தேவையான சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரடியாக அணுகலாம்.
தொடர்புக்கு: 9444451878, 917697370
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.skilltraining.tn.gov.in
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.9.2020