தேர்வுகள் என்பதே மன உளைச்சல்தான்... - நடிகர் விவேக்

தேர்வுகள் என்பதே மன உளைச்சல்தான்... - நடிகர் விவேக்

தேர்வுகள் என்பதே மன உளைச்சல்தான்... - நடிகர் விவேக்
Published on

பரீட்சை என்பதே மன உளைச்சல் தான் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1 முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜுன் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்காக மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் “பரீட்சை என்பதே மன உளைச்சல்தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.”எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com