கல்வி
கைகள் இல்லை... தன்னம்பிக்’கை’ மட்டும்தான் - +2 தேர்வில் தேர்ச்சிபெற்ற கைவிடப்பட்ட மாணவி!
கைகள் இல்லை... தன்னம்பிக்’கை’ மட்டும்தான் - +2 தேர்வில் தேர்ச்சிபெற்ற கைவிடப்பட்ட மாணவி!
இரண்டு கைகள் இல்லாத போதும் தன்னம்பிக்கையுடன் படித்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணவி 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
பிறக்கும் போதே, இரண்டு கைகளும் இல்லாத குழந்தையான லட்சுமியை அவரது பெற்றோர் புறக்கணித்துள்ளனர். பின்னர் ஆதரவற்றோர் காப்பகத்தில் அவர் வளர்ந்துள்ளார்.
கைகள் இல்லாத போதிலும், மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் படித்துவந்த லட்சுமி தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வில் 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். அவரை காப்பக நிர்வாகிகள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி இனிப்பு வழங்கினார்.