ஊடகங்களில் சேர விரும்பும் மாணவரா...? ஓர் ஆண்டு ஊடகக்கலை டிப்ளமோ

ஊடகங்களில் சேர விரும்பும் மாணவரா...? ஓர் ஆண்டு ஊடகக்கலை டிப்ளமோ
ஊடகங்களில் சேர விரும்பும் மாணவரா...? ஓர் ஆண்டு  ஊடகக்கலை டிப்ளமோ

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலத்தின் சார்பில் தமிழ்வழியில் ஊடகக்கலை (Media Art) என்ற தொழில்சார்ந்த ஓர் ஆண்டு பட்டயப் படிப்பினை தொலைநிலைக்கல்வி முறையில் வழங்கிவருகிறது.
இந்தப் படிப்பில் சேர ஊடகத்துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களும், ஏற்கெனவே பணியாற்றிவருபவர்களும் விண்ணப்பிக்கலாம்.

2020 - 2021 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இந்தப் பட்டயப்படிப்பு, நடைமுறையில் ஊடகங்கள் செயல்படும் தன்மைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீனமயமாகியுள்ள ஊடக வளர்ச்சிக்கேற்ப எதார்த்தமான தெளிவான பாடத்திட்டத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு உதவும் தமிழ்வழி படிப்பாக உள்ளது.

பாடத்திட்டம்
மக்கள் தகவல் தொடர்பு அறிமுகம் (Introduction to Mass Communication)
உலக அளவில் ஊடகக்கொள்கைகள், ஊடகங்களின் செயலாக்க நெறிமுறைகள், சர்வதேச ஊடகங்களின் தன்மை, மக்கள் தகவல் தொடர்பின் ஆரம்பக்கால வரலாறு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கொண்ட பாடங்கள்.

இதழியல் (Journalism)
பத்திரிகை வரலாறு, இதழியல் கொள்கைகள், செய்தியாளர்களின் கடமைகள், ஆசிரியர் குழுவின் பணிகள், பத்திரிகை வடிவமைப்பு, இதழ்களின் வகைகள், உலகப் புகழ்பெற்ற பத்திரிகை பற்றிய தகவல்கள், செய்தி மற்றும் செய்திக்கட்டுரை எழுதும் முறைகள் உள்பட இதழியல் தொடர்பான பாடங்கள் இடம்பெறும்.

வானொலி, தொலைக்காட்சிக் கலை (Radio,TV Art)
வானொலி, தொலைக்காட்சி வளர்ந்த வரலாறு, வானொலியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குதல், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிப் பேட்டிகள், நேரலை நிகழ்ச்சிகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நுட்பங்கள், பல்வேறு நிகழ்ச்சி வடிவங்கள் எழுதும் நுட்பங்கள் விரிவாகக் கற்றுக்கொடுக்கப்படும்.

திரைப்படக் கலை (Film Art)
திரைப்படக்கலை வளர்ந்த வரலாற்றுப் பின்னணி, உலகப்புகழ்பெற்ற மேதைகள், திரைப்பட இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், திரைக்கதையாளர்கள், சினிமாவுக்குக் கதை எழுதுவது எப்படி, ஒரு நாவலை திரைப்படமாக மாற்றுவது எப்படி உள்ளிட்ட எண்ணற்ற பாடங்களை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும், திரைக்கதை எழுதுதல், திரைக்கதை அமைப்பு, காட்சிபிரித்தல், உரையாடல் உள்ளிட்ட பல நுட்பங்கள் கற்பிக்கப்படுகின்றன.

மொழித்திறன், ஊடகங்களுக்கு எழுதுதல் (Language Skills writing for Media)
ஊடகங்களுக்கேற்ப எழுதுவது பற்றிய பாடங்கள் இடம்பெறும். அதேபோல மொழி ஆளுமையை மெருகேற்றிக்கொள்வது பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்படும்.

விரிவான பாடநுல்கள்
ஓர் ஆண்டு பட்டயப்படிப்பில் சேர்ந்து படிக்கும் ஒவ்வொருவருக்கும் துறைசார்ந்த ஐந்து நூல்கள் வழங்கப்படும். ஊடகத் துறையில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஏற்கெனவே பணியாற்றி வருபவர்களுக்கும் இந்தப் படிப்பும், பாடநூல்களும் சிறந்த வாய்ப்பாகவும் கூடுதல் தகுதியாகவும் அமையும்.

கல்வித்தகுதியும் விண்ணப்பமும்
பட்டயப்படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் உள்பட படிப்புக் கட்டணம் ரூ.1980 மட்டுமே. இறுதித்தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். அசைன்மெண்டுக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதுவொரு புதுமையான முறையாக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் உள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.8.2020
விவரங்களுக்கு: www.tnou.ac.in
தொடர்புக்கு: 044-24306663, 044-24306664

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com