நிறைவேறியது மில் தொழிலாளி மகளின் மருத்துவர் படிப்பு கனவு

நிறைவேறியது மில் தொழிலாளி மகளின் மருத்துவர் படிப்பு கனவு
நிறைவேறியது மில் தொழிலாளி மகளின் மருத்துவர் படிப்பு கனவு

மன்னார்குடி அருகே அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர், தமிழக அரசின் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ளார்.

கோவிந்தநத்தம் கிராமத்தை சேர்ந்த மில் தொழிலாளி அன்பழகன் - ரேவதி தம்பதியின் மூத்த மகள் மோனிஷா. திருமக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், கடந்த கல்வியாண்டில் பிளஸ் டூ முடித்தார். மருத்துவர் ஆகும் கனவில் வீட்டிலிருந்தபடியே நீட் தேர்வுக்கு தயாரான மோனிஷா, 257 மதிப்பெண்களுடன் திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தற்போது இவர், தமிழக அரசின் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டின்படி, மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். மோனிஷாவை உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நேரில் அழைத்து வாழ்த்தினார். மோனிஷாவின் முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த கலைக்கோவன் என்பவர் வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com